போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்கத்திட்டம்- காவல் ஆணையர்

கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 19

கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மாநகரின் சாலைகளில் அவ்வப்போது கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து நெரிசல் நிலவும் இடங்களை சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த கோவை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநகர காவல்துறைக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் தொடங்க இருப்பதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமூக வலைதளங்கள்

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் தொடர்பான விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சமூக வலைதளப் பக்கங்களில் எந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக தெரிவிக்க முடியும். அதே போல், குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் முறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் குறித்த அறிவுரைகளும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.

இதன்மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறையும். அதோடு மாநகர காவல்துறையின் சமூகவலைதளத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை சுட்டிக்காட்ட முடியும். அதோடு, குற்றமில்லா மற்றும் விபத்தில்லா கோவையை உருவாக்குவதற்கான கருத்துக்களை பொதுமக்கள் பதிவு செய்ய முடியும்.

வாட்ஸ்-ஆப்

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் சில சமூக விரோதிகள் தவறாக நடக்க முயன்றால் அவர்கள் குறித்த புகார்களை உடனடியாக கோவை மாநகர போலீசாரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். விரைவில் அந்த தொலைபேசி எண் மாநகர பேருந்துகளில் குறிப்பிடப்படும். புகார்களை வாட்ஸ்-ஆப்'ல் குறுஞ்செய்தியாக அனுப்பலாம். புகார் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் பேருந்தை வழிமறித்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரை கைது செய்வார்கள்.

இரவுக் காவல்

கோவையில் நடந்த ஏ.டி.எம் மைய கொள்ளையில் ஒரு தனியார் கால்டாக்சி ஓட்டுநர் கொடுத்த தகவல் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடனடியாக அனைத்து டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் இரவு நேர பாதுகாவலர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த முடியும்.

ஒவ்வொரு வார்டிலும் குடியிருப்பு வாசிகளின் ஒத்துழைப்போடு இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சம்மந்தப்பட்ட வார்டில், ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...