அரசு அறிவித்த ஊதியம் வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 19

திருப்பூர், கோவை மாவட்டத்தில் 35,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 90 சதவிகிதம் பேர் கூலியின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவிகிதம் மற்றும் 31 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.

இருப்பினும் தற்போது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததால் 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமலும் வறுமையில் சிக்கியுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...