கோவை வந்த சட்டமன்ற உறுப்பினர் தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 19

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று கரூரில் இருந்து திருப்பூர் சென்று தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு-வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவருக்கு இராமநாதபுரம் அடுத்துள்ள ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.

மேலும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலர்விழியின் கணவர் ஸ்டேன்ஸ் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து டிடிவி அணியில் இணைந்தனர். பின்னர், ஆத்துப்பாலம் பகுதியிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...