ஜனவரி 28-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கோவை, ஜனவரி 19

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 

பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :- 

பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது. 

ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும். 

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது. 

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...