இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்த ஸ்ருதியிடம் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதியிடம் இணையதள புகார் பதிவுகள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, ஜனவரி 20

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதியிடம் இணையதள புகார் பதிவுகள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று முதல் நாளாக ஸ்ருதியிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இவர் மீது கோவையில் மட்டும் 3 வழக்குகள் உள்ளது. அதுமட்டுமல்லாது, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ஒரு வழக்கும், சென்னை மாநகர காவல்துறையில் ஒரு வழக்கும் உள்ளது. இவர் மீது மேலும் பல புகார்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கோவையில் இருந்த அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது போலீஸாரை தாக்கியதாகவும் ஸ்ருதி மீது வழக்கு உள்ளது. தற்போது, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழு விபரம் தெரியவரும்" இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...