புதிய கட்டண நிர்ணயத்தால் குழம்பிப் போன பொதுமக்கள் மற்றும் நடத்துநர்கள்

அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதால், புதிய கட்டணத்தில் டிக்கெட்டுகளை வழங்குவது, வாங்குவதில், பயணிகள் மற்றும் நடத்துநர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

கோவை, ஜனவரி 20

அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதால், புதிய கட்டணத்தில் டிக்கெட்டுகளை வழங்குவது, வாங்குவதில், பயணிகள் மற்றும் நடத்துநர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. 

வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு சொந்தமான 40 பேருந்துகள் வால்பாறை பணிமனையிலிருந்து இயங்கி வருகிறது. அதில் பொள்ளாச்சி, கோவை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு நள்ளிரவில் திடீர் பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தியுள்ளது. வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு பழைய கட்டணம் ரூ.41 ஆக இருந்தது. புதிய கட்டணம் ரூ.66 ஆகும். இதனால், தற்போது ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால், தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தீடீரென்று நள்ளிரவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வெளியூர் பயணம் செய்யும் பயணிகள் பழைய கட்டணத்தை கருத்தில் கொண்டே தங்களிடம் பணம் வைத்திருப்பார்கள். ஆனால், இந்த திடீர் கட்டண உயர்வு காரணமாக பயணச்சீட்டு வாங்க கையில் போதிய பணம் இல்லாததால் தங்களால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



அரசு பேருந்து நடத்துநர்கள் இந்த புதிய கட்டண அறிவிப்பால் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பழைய கட்டணமே தங்கள் நினைவில் இருப்பதாகவும், புதிய கட்டணம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு சில நாட்கள் ஆகும் என்று நடத்துநர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் வால்பாறை பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தரம் குறைவாகவும், ஜன்னல் கண்ணாடி எதுவும் இல்லாமல் பராமரிப்பு இல்லாமலே இயக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதி வால்பாறை என்பதால் அரசு பேருந்தை நம்பி இரவு நேரங்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். காரணம் பேருந்துகள் எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பழுதடைந்து நடுவழியிலேயே நிற்கும் அவல நிலை தான் வால்பாறை பகுதியில் உள்ளது. இதனால் தமிழக அரசு பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



தேயிலை தோட்டத் தொழிலை மட்டும் நம்பியுள்ள வால்பாறை மக்களுக்கு வழங்கப்படுவதோ மிகமிக குறைவான கூலியாகும். இதற்கிடையில் தமிழக அரசின் இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...