பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.



திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், போக்குவரத்து துறையில் நஷ்டம் வருவதற்கு தமிழக அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதே காரணம். ஆட்சியில் குழப்பம், ஊழல்களால் தான் போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை மக்கள் மீது திணிப்பது சரியான நடவடிக்கையல்ல. 

சாமானிய மக்களால் இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த முடியாது. தமிழக அரசு இதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். என்றார். 

மேலும், போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க. காரணம் என்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியனின் குற்றச்சாட்டை மறுத்து அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை நடத்தி் சரி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியின் போது பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கிடையாது. 

டெல்லியில் மருத்துவ மாணவர்கள் மரணம் கவலை அளிக்கிறது. இரண்டு மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியது. சரத்பிரபுவின் உடலில் காயம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...