நீலகிரியில் இருந்து கோவை வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்வு: பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 20

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்கள் அலுவல், கல்வி, மருத்துவம் காரணமாக மக்கள் அருகில் உள்ள கோவை மாவட்டத்துக்கு தான் வர வேண்டும். உதகையிலிருந்து கோவைக்கு ரூ.53-லிருந்து கட்டணம் ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெ.ஆல்துரை கூறும்போது, ‘கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக ஏற்றியிருக்கலாம். ஆனால், தற்போது 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது, மக்கள் மீது அரசு சுமை ஏற்றியுள்ளது. குக்கிராமங்களில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், கூலி தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்தை ஊக்கவிக்கவே கட்டண உயர்வு வழி வகுக்கும். இதைக் கண்டித்து வரும் 25-ம் தேதி மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் தேயிலை, காய்கறி விவசாயமே பிரதான தொழில். தோட்ட தொழிலாளர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். தற்போது, பேருந்து கட்டணத்துக்கே பாதி வருவாய் சென்றுவிடும். போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து துறையை சேவை துறையாக கொண்டுவர தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்தப் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாதாரண பேருந்துகளில் கூட விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் பெறப்படுவதால், பொதுநல வழக்கு தொடர நுகர்வோர்மன்றம் முடிவு செய்துள்ளது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...