போலீசாரின் வாகன சோதனையின் போது விபத்து : கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.



திருச்சி சாலை இராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் நேற்று போலிசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதில் போலீசார் சாலையின் நடுவே வந்து ஆட்டோவை மடக்கிப்பிடிக்க முயற்சித்தனர். 

அப்போது ஆட்டோவின் பின்னால் வந்த சூலூரை சேர்ந்த விஜேஸ்குமார் (35) என்ற வாலிபர் நிலை தடுமாறியதோடு ஆட்டோவில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். 

மேலும், போலீசார் அஜாக்கிரதையாக வாகனத் தணிக்கை செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். 

இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...