வேலைவாய்ப்பினை உருவாக்க சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 863 பயனாளிகளுக்கு ரூ.1.42-கோடி மதிப்பில் தனி உரிமை நில அனுபவ ஆவணங்கள், வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி, அனைத்துப் பகுதிகளுக்கான குடிநீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைவசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கிலே சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...