பேருந்து கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் மாதர் சங்கத்தினர்

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, ஜனவரி 22

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்திற்குத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் அதிருப்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து கட்டண உயர்வு நியாயம், அநியாயம் என்ற வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு, அதற்கான வாக்கு சீட்டுகளை அங்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இதில், அனைத்து பொதுமக்களும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது அநியாயம் என அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர். இந்த வாக்குகளைப் பெற்று அதனை தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இதுபோன்று பொதுமக்களிடம் வாக்குகளைப் பெற உள்ளதாகவும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...