கோவை - பொள்ளாச்சி இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மற்றும் பொள்ளாச்சி இடையே இன்று முதல் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் இந்த ரயில்சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 22

கோவை மற்றும் பொள்ளாச்சி இடையே இன்று முதல் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் இந்த ரயில்சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை - பொள்ளாச்சி இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டு துவங்கியதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, 8 ஆண்டுகளுக்கு பின், அகல ரயில்பாதை பணிகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி கோவை - பொள்ளாச்சி இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது. 

இச்சேவையும், பொதுமக்களுக்கு பயனற்ற வகையில், மதிய நேரத்தில் இயக்கியதால், பயணிகள் இல்லாமல் காலியாகவே ரயில்கள் ஓடின. இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து காலை 8:00 மணிக்கும், கோவையில் இருந்து மாலை 6.00 - 7.00 மணிக்கும் புறப்படும் வகையில், ரயில் நேரம் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். இதனிடையே, கடந்த 14-ம் தேதி முதல் மதுரையில் இருந்து பழநி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, மதிய நேரத்தில் கோவை - பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கோவை, பொள்ளாச்சி இடையே, அலுவலக நேரத்துக்கு ஏற்ப ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. 

இந்நிலையில், கோவை - பொள்ளாச்சிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, கோவையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு, 6.45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை 7.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு கோவை சென்றடையும். அதே போன்று, மாலை 6.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைகிறது. இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திரும்பும் ரயில், இரவு 9..00 மணிக்கு கோவை வந்தடைகிறது.

தற்போது, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளில் ரூ. 17 என்றிருந்த கட்டணம் ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 23 ரூபாய் கட்டணம் ரூ. 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை - பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...