டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்றார் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர்

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

கோவை, ஜனவரி 22

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

டாடா நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் 'மும்பை மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான இதில் வெற்றி பெருபவர்களுக்கு 4 லட்சத்து ஐந்தாரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

அதன்படி, நேற்று இந்த போட்டியானது மும்பை சத் ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்டது. 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ் பங்கேற்றார்.

42 கி.மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இவர் 5 நிமிடம் 13 நொடிகளில் குறித்த இலக்கை கடந்து பதக்கத்தை வென்றார்.

இப்போட்டியில் 7 நிமிடங்களுக்குள் இலக்கை கடப்பவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படும். 

தமிழக காவல்துறையில் இருந்து முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவருக்கு, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...