சங்கராச்சாரியாக நியமிக்க தன்னை பரிந்துரை செய்திருப்பது விஷமத்தனமானது : அர்ஜீன்சம்பத்

அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். 

காஞ்சி சங்கராச்சார் ஜெயந்திர சரஸ்வதி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்து மக்களுக்காகப் பணியாற்றும் ஆன்மிக நம்பிக்கை கொண்ட அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்தும், பெரியார், அம்பேத்கர் படங்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகம் முன்பாக தமிழ்புலிகள் கட்சியினர் திரண்டனர். பின்னர், இது தொடர்பாக,  காஞ்சி சங்கர மடத்தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில், சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில்,  பல்வேறு விதமான ஒழுக்கங்கள், ஆன்மீக பயிற்சிகள், வேத உபநிடதங்களைக் கற்றவர்களே சங்கராச்சார் முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது, தன்னை சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது விஷமத்தனமானது. நான் ஒரு இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டன். சங்கரமடம் பிராமணர்களுக்கென்ற ஒருமடம் என்றும், அதில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகக் கூறி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.  என்னை ஆயுதமாகப் பயன்படுத்தி தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இதனை நான் முறியடிப்பேன், என்றார். 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...