கோவை மாநகர காவல்துறையை பெருமைப்படுத்திய பெண் காவலர் : பாராட்டி பரிசு வழங்கிய நீதித்துறை

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண்  காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு  வழங்கி கவுரவித்துள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக பல காவலர்கள் கோவை மாநகரில் பணியாற்றி வருகின்றனர். 

தன்னலமின்றியும், கடமையை சிறப்பாக செயல்படுத்தியும், சமூக தொண்டாற்றியும் காவல்துறையை கவுரவிப்பவர்கள் கோவை மாவட்டத்தில் ஏராளம். 

அந்த வகையில், நீதிபதியால் பாராட்டப்பட்டு மேலும் ஒரு பெருமையை மாநகர காவல் துறைக்கு சேர்த்திருக்கிறார் பெண் காவலர் ஸ்வப்ன சுஜா. 

சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். 

இடமாறுதலின் பேரில் ஓராண்டுக்கு முன் சிங்காநல்லூர் காவல் நிலையம் வந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகை செய்துள்ளார். 

2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழக்குகளை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார். 

இந்த நிலையில்,  மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி V.P.வேலுசாமி மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட வழக்குகள் தொடர்பான கூட்டம் 

இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில், வழக்குகளை விரைந்து முடிக்க உதவிய பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு வெகுமதியாக பரிசினை வழங்கி கவுரவித்துள்ளார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு அந்தத்துறை  அதிகாரிகள் பாராட்டுக்களையும், பரிசுகளையும் வழங்கக் கேட்டிருப்போம். 

ஆனால், நீதிபதி ஒருவர்  பெண் காவலரை கவுரவித்த நிகழ்வு ஒட்டுமொத்த போலீசாரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...