இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக கோவையில் ’இயற்கை அறிவியல் நிறுவனம்’ துவக்கம்

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 23

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களிடையே இதனைக் கொண்டு செல்லும் நோக்கில் கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

நிறுவன தலைவர் ராஜலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் கணபதி விழா மடலை வெளியிட்டுப் பேசினார். இதில், இயற்கை, விவசாயம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்றும்,  பல்வேறு இயற்கையை பாதுகாப்பது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கணபதி இது போன்ற முயற்சிகளை தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...