வால்பாறையில் கழுதையை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி : பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தாக்கி கொன்று விடுகிறது. இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்துநிலையம் அருகாமையில் சிறுத்தைப்புலி ஒன்று கழுதையை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்து கழுதையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று இறந்த கழுதையை கைப்பற்றினர். வனத்துறையினர் கழுதை இறந்தது குறித்து வாகனம் மோதி இறந்ததா அல்லது சிறுத்தைப்புலி தாக்கி இறந்ததா என இரு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே, இன்று மாலை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் இறந்த கழுதையை உடற்கூறு ஆய்வு செய்தார். அப்போது, கழுதையின் கழுத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கழுதையை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றதை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் உறுதி செய்தார்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...