பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் : போலீஸார், மாணவர்களிடையே தள்ளுமுள்ளு

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களை, போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை, ஜனவரி 24

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களை, போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது, கல்லூரி முன்பாக மாணவர்கள் சாலையில் படுத்து, மறியலில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். மேலும், மாணவர்களை குண்டு கட்டாகத் தூக்கி சென்று கைது செய்ததால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள பேருந்து கட்டண உயர்வைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடருமென கூறிய மாணவர்கள், ஜக்டோ - ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் போராட்டத்தை மாணவர்கள் ஆதரித்தாகவும், ஆனால், மாணவர்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் ஆதரிக்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...