பயனற்றும் போகும் கோவை ஏரிகளை மீட்கும் முயற்சிகள் : சீரமைப்பு பணிகளை பராமரிப்பது யார்..?

சீரமைக்கப்படும் ஏரிகள் மற்றும் பகுதிகளை முறையாகப் பராமரிக்காமல், மீண்டும் பாழடையச் செய்யும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 24

சீரமைக்கப்படும் ஏரிகள் மற்றும் பகுதிகளை முறையாகப் பராமரிக்காமல், மீண்டும் பாழடையச் செய்யும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் உள்ள ஏரிகளை சீரமைத்து, புதுப்பொழிவு பெறும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிங்காநல்லூர் மற்றும் கிருஷ்ணம்பதி ஏரிகள் அதன் தன்மையை இழந்து காணப்பட்டன. எனவே, அதனை மீட்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நாசவேலையில் ஈடுபடும் சிலர், ஏரிகளை மறுசீரமைக்கும் பணிகளுக்கு முட்டுக்கட்டைகளாக இருந்து வருகின்றனர்.

உதாரணமாக, அண்மையில் சிங்காநல்லூர் குளத்தை சீரமைக்கும் பணியில் பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உள்ளூர் மீனவர்கள் சிலர், தன்னார்வலர்களை அச்சுறுத்தும் விதமாக ஏரியின் கரைக்கு தீயிட்டு கொளுத்தினர். இதனால், சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக, கோவை மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டதில், இருதரப்பினரிடையே தற்காலிக தீர்வு காணப்பட்டது. 

இந்த இடையூறு காரணமாக, தன்னார்வலர்களின் கடின உழைப்பு மற்றும் பணமும்தான் வீணடிக்கப்பட்டது. 



இந்த நிலையில், ஏரிகள் மீட்கும் பணியில் மேலும் ஒரு பிரச்சனையை அவர்கள் சந்தித்துள்ளனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கிருஷ்ணம்பதி ஏரியின் கரையில், 100-க்கும் மேற்பட்ட காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடின உழைப்பு மற்றும் பணத்தை செலவு செய்து தூய்மைப் பணிகள் மேற்கொண்ட நிலையில், இதுபோன்ற அசுத்தமான நடவடிக்கைகள் மீண்டும், மீண்டும் அரங்கேறுவது தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

பணம் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவால் தூய்மையடையும் கிருஷ்ணம்பதி போன்ற ஏரிகளை, முறையாகப் பராமரிக்காமல் இருப்பதே இதற்கு காரணமா..? அல்லது அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கைகள் இது போன்ற செயல்களுக்கு காரணமா..? என அனைவரிடத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. 

மேலும், தூய்மையாக்கப்படும் பகுதிகளை முறையாகப் பராமரிப்பதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தன்னார்வலர்கள் அவர்களது பணிகளை திறம்படச் செய்ய முடியும். 

Newsletter

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...