கோவையில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி : மற்றொருவர் படுகாயம்

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கோவை, ஜனவரி 24 

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சுதீஷ் குமார் (20). இவர், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்ததும் அப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சுதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஸ் என்பவரும் நடந்து சென்றனர். அப்போது, இருவரும் ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்றனர். 

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில் நிலைய காவலர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...