பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 24

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன்மூலம் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17-ல் இருந்து ரூ.24-ஆக உயர்த்தப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து.

இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இன்று உதகை மார்கெட் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக அரசிற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில், நீலகிரி மவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, பேருந்து கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...