பேருந்து பயண சீட்டு உயர்வு: மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் உருவ பொம்மை உருவாக்கிய தங்க நகை தொழிலாளி

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, ஜனவரி 25

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் என பலவகைகளில் உருவச்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.

தற்போது, தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்தால் பலதரப்பட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், யு.எம்.டி. ராஜா பேருந்து பயணச் சீட்டுகளை கொண்டு கட்டண உயர்வால் மக்கள் அடைந்துள்ள வேதனையைக் குறிக்கும் வகையில் பயணச் சீட்டு தலை மேல் கை வைத்து அமர்ந்துள்ளது போல வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 10 பயண சீட்டுகளைக் கொண்டு இதை உருவாக்க ஒரு நாள் தேவைப்பட்டது. மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இதை உருவாக்கி உள்ளேன் என்றார்.



Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...