நீதிபதி அலமேலு நடராஜனை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிய சங்கர் கொலையின் தீர்ப்பு

திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார்.


திருப்பூர், ஜனவரி 25

திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார். 

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் (52) இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி அலமேலு நடராஜன் திருச்சி செயிண்ட்ஜோசப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் திருச்சி சட்ட கல்லூரியில் சட்டபடிப்பை முடித்தார். தனது அயராத முயற்சியால், 1991 ஆம் ஆண்டு நீதிபதியாக அலமேலு நடராஜன் பொறுப்பேற்றார். பின்னர் கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 

இதனிடையே, கடந்த 2015 ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டணை வழங்கி இந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார். இதன்மூலம், அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காணப்பட்டார். 

இவ்வாறு வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டு பிரபலமான அவரது மறைவு, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...