உதகையில் அருங்காட்சியகமாக உருமாறும் ஆங்கிலேயர் கால பழைமை காவல்நிலையம்

உதகையில் ஆங்கிலேயர் கால பழையமையான காவல்நிலையக் கட்டிடத்தைப் பராமரித்து அருங்காட்சியகமாக மாற்ற மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.

நீலகிரி, ஜனவரி 25

உதகையில் ஆங்கிலேயர் கால பழையமையான காவல்நிலையக் கட்டிடத்தைப் பராமரித்து அருங்காட்சியகமாக மாற்ற மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல்நிலையம். இந்த காவல்நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 

கடந்த 1921-ம் ஆண்டு மாப்லா கலவரம் தென்னிந்தியாவில் வெடித்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கேரளா மாநிலம் எரநாடு, வள்ளவநாடு மாவட்டங்களில் கலவரங்கள் தீரவிமாகின. கலவரக்காரர்கள் ஆங்கிலேய அரசு கட்டிடங்கள், கருவூலம் மற்றும் காவல்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.



1921-ஆண்டின் பிற்பகுதியில் பரவிய கலவரத்தில் கலவரக்காரர்களால் நீலகிரி காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர் சி.என்.சேஷகிரி ராவ், உதவி ஆய்வாளர் எம்.ஷேக் மொய்தீன் சாயிபு, காவலர்கள் ஈசரண் நாயர் மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கலவரங்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயர் அரசு மலபார் சிறப்பு காவல் படையை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆங்கிலேய ராணுவம் மூலம் பயிற்சி அளித்தது. இந்த சிறப்பு காவலர்கள் கலவரங்களை கட்டுப்படுத்தினர்.

கலவரத்தில் பலியான நீலகிரி போலீசாரின் நினைவாக உதகை பி1 காவல்நிலையத்தில் நீலகிரி காவல்துறை சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்த கல்வெட்டு இன்றும் அந்த காவல்நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாகி விட்டதால், கட்டிடத்தை இடித்துவிட்டு மாவட்ட காவல்துறை அலுவலகம் கட்ட கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. பாரம்பரியமான இந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனால், இந்த கட்டிடத்தை இடிக்கும் முடிவு மாற்றப்பட்டு உதகை அரசு மருத்துவமனை அருகே புதிய மாவட்ட காவல் அலுவலகம் கட்டப்பட்டது.



தொடர்ந்து, இந்த பழைய கட்டிடத்தை பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்ற மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த கட்டிடத்தை பாரம்பரிய கட்டிடமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழைமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், நீலகிரியின் பழைமையான புகைப்படங்கள், வன உயிரின புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகம் விரைவில் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இதுகுறித்து கூறுகையில், உதகை பி1 காவல் நிலையம் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, ஆங்கிலேயர் கால பழைமையான கட்டித்தை பராமரித்து அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றார்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...