மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது - துரைமுருகன்

மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

கோவை, ஜனவரி 25

மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

கோவையில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது-

காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்துள்ள போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது தமிழுக்கு விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.

உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதையைத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை. அவர்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக உருவாகவில்லை.

மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சியினர் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றி கவலைப்படுவதாக இந்த அதிமுக அரசு இல்லை. முழுமையாக எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறது, பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...