ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவையில் விவசாயிகளுக்கு இடுபொருள் பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 25

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.



பீளமேட்டில் உள்ள ஈஷா நர்சரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இயற்கை முறையில் பயிர் வளர்ச்சிக்கான இடுபொருட்களை எப்படி தயாரிப்பது என்ற களப்பயிற்சியை மேற்கொண்டனர். இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்கள் செய்யும் வழிமுறைகள், பயன்படுத்தும் வழிகள், சேமிக்கும் முறைகள், அவற்றின் பலன்கள் போன்றவை கற்றுத் தரப்பட்டது.

இரசாயன விவசாயத்திற்கு மாற்று தேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையும். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்துஇலைகஷாயம், அக்னிஅஸ்திரம், நீம்அஸ்திரம், புளித்த மோர் கரைசல், மூங்கில் E.M, பழ E.M, மீன்அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும், களப்பயிற்சியும் பெற்றனர். இந்த இடுபொருட்களில் அடிஉரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சிவிரட்டி போன்றவை அடங்கும். 

முன்னோடி இயற்கை விவசாயி பொம்முராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னை பற்றிய விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

ஈஷா விவசாய இயக்கம் தன்னார்வத் தொண்டர்களுக்காக ஐந்து மண்டலங்களிலும் நடத்திய இடுபொருள் பயிற்சியில் பங்கு பெற்ற பல விவசாயிகள் தன்னார்வமாக இடுபொருள் தயாரிப்பு பயிற்சியை மற்ற விவசாயிகளுக்குக் கொண்டு செல்ல முனைந்துள்ளனர். கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தன்னார்வத் தொண்டர்கள் நடத்திய இத்தகைய பயிற்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...