திருப்பூரில் 15 வது புத்தக திருவிழா தொடங்கியது

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஜனவரி 25

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட  இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் ஆண்டு தோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 வது திருப்பூர் புத்தக திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது.    

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்ற துவக்க விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். 

பின்னர் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். பிப்ரவர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழாவில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்டு தங்களது பதிப்பகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். 

மேலும் கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டுதோடு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த்தாண்டு 1 லட்சம் பாரையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தங்கள் விற்பனை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...