உதகையில் நலத்திட்ட உதவிகளுடன் குடியரசு தின விழா கொண்டாட்டம்

இன்று 69-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.



நீலகிரி, ஜனவரி 26

நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 69-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 3 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குப் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா:-

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அணி வகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேசிய கொடியை ஏற்றினார்.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு யானைகள் அணி வகுத்து நின்றதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...