இளைஞர்களை ஏமாற்றிய ஸ்ருதி இதுவரை ரூ.47 லட்சம் மோசடி : போலீஸார் விசாரணையில் அம்பலம்

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி, இதுவரை ரூ.47 லட்சம் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, ஜனவரி 26

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி, இதுவரை ரூ.47 லட்சம் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார்.  இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஒருவாரமாக ஸ்ருதியிடம் விசாரணையை நடத்தினர். நேற்றுடன் (ஜன.,25) போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், இதுவரை ரூ. 47 லட்சம் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை பிப்.,1-ம் தேதி வரை காவலில் வைக்கக் கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...