நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018: சிறந்த மாடுபிடி வீரருக்கு மாருதி கார் பரிசு

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

கோவையில் நடைபெற்ற 'நம்ம கோவை ஜல்லிக்கட்டு 2018' போட்டியில் சிறப்பாக மாடுபிடித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை செட்டிபாளையம் பகுதியில் கோவை மாவட்ட நிர்வாகமும், தனியார் அமைப்பும் இணைந்து இன்று ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு துவக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில், சரவணம்பட்டி கரிவரதராஜ கோவில் காளை முதலில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, போட்டிக்காகத் தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியில் விடப்பட்டன. இதனை 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எதிர்த்து நின்று அடக்கியது அங்கு கூடியிருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.

இப்போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த மாடுபிடி வீரராக முதல் பரிசை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த மட்டப்பாறையைச் சேர்ந்த கோடி-க்கு ஹீரோ இருசக்கர வாகனமும், மூன்றாம் இடம் பிடித்த காட்டூர் கார்த்திக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் டி.ராஜசேகரின் மாடு சிறந்த மாடாகத் தேர்வு செய்யப்பட்டு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த சிவா மற்றும் முத்துராமன் ஆகியோரின் மாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப்பிடித்து ஹீரோ இருசக்கர வாகனம், டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...