ராட்சத மரம் விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 29

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 



உதகை அருகே லவ்டேல் சந்திப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இந்த மரமானது உதகை மற்றும் குந்தா செல்லும் பிரதான சாலையிலும் மலை ரயில் பாதையிலும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ராட்சத கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டது. இதனால், உதகை மற்றும் குந்தா முக்கிய சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...