”பறவைகளை கண்டு ரசிப்பது உடல்நலத்தை ஆரோக்கியமாக்கும்”

பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கோவை : பறவைகளை கண்டு ரசிக்கும் இளைஞர்களின் உடல்நலம் நல்ல ஆரோக்கித்துடன் வாழ வகை செய்யும் என அமெரிக்க பறவைகள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 



கோவையில் எச்.எஸ்.பி.சி.யின் 7-வது பறவைகளுக்கான பந்தயம் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் தேசிய பறவைகள் சங்கத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, கோவை மற்றும் வெளிநாடுகளில் பறவைகள் பார்வையாளர்கள் குறித்து ரிச்சர்ட் பேசுகையில், அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதியவர்களை மட்டுமே காண முடிகிறது. ஆனால், கோவையில், அதிகப்படியான போட்டியாளர்கள் இளைஞர்கள். இது அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். என்றார். 



மேலும், அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

இதேபோல, இந்திய பறவைகள் பந்தயம் சங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் மோங்கா கூறுகையில், கடந்த 15 நகரங்களில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சுமார் 3,000 -க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பறவைகள் பார்வையாளர்கள் முக்கிய அம்சமாக உள்ளனர். இவ்வாறு கூறினார். 

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் அறிவியலாளர் பி. பிரமோத் கூறுகையில், கடந்த 6 பறவைகளுக்கான போட்டியின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம்  புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றார். 

கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25 அணிகள் கலந்துகொண்டன. ஐரோப்பிய பீ ஈட்டர், டெமினிக் ஸ்டிண்ட் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...