கோவைக்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் வருவது குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறைப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்தக் கூட்டத்தில், கோவை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரையறை பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த ஆய்வு செய்ய பிப்ரவரி 1-ம் தேதி தமிழ்நாடு மறுவரையறை ஆணைய அதிகாரிகள் கோவை வருகின்றனர். இதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...