அமைச்சர்களின் இலாபத்திற்காகவே பேருந்து கட்டணம் உயர்வு : ஆதாரம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பேட்டி

ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை வடவள்ளி அருகே டிடிவி தினகரனின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு மட்டுமே. போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறையே தவிர வருமானம் அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற்று இருப்பார்கள். போக்குவரத்தில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். 

 

சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பேருந்து கட்டண உயர்வு என்பது உண்மைதான். இது குறித்து எங்களிடமே பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

 

பிப்ரவரி இறுதிக்குள் "கூவத்தூர் பழனிச்சாமி" அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க.,விலிருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற அ.தி.மு.க., சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான். என்றார். 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...