கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் தேரோட்டத் திருவிழா

கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை : கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் இருக்கும் ஐம்பொன் சிலையை தேரில் வைக்கப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கோட்டை மேடு ஆகிய பகுதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோவில் முன்பாக உள்ள தேர்நிலையை அடைந்தது.

இதில், நூற்றுக்கணக்காக ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரோட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு காலை நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...