நீலகிரியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.       



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனை அந்த தனியார் விடுதி நிர்வாகம் மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை அந்த கிணற்றில் தவறி விழந்துள்ளது.



இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வன அதிகாரி கணேசன் தலைமையில் கிணற்றில் விழந்த காட்டெருமையை  காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த காட்டெருமை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவு நடைபெறுவதற்கு தனியார் விடுதிகள், அரசின் அனுமதி பெறாமல் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் வெட்டுதல், பாறைகள் உடைத்தல் போன்ற சட்ட விரேத செயல்களில் ஈடுபடுவதே காரணம் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...