நதிகளை மீட்போம் : சத்குருவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட விவசாயிகள்

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.



நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், நீர்ப்பாசனம், நதி நீர் அதிகரிப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, 'தென்னிந்தியாவில் இருந்து இமய மலை வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை தமிழகத்திற்கு உண்டு. ஆனால், விவசாயிகள் ஒன்று கூடி செயல்படாமல் பலவீனமாக உள்ளனர். விவசாயத்தை நம்பிய நாட்டின் அரசு விவசாயிகளின் அரசாகத்தான் இருக்க முடியும். 

பல்வேறு நாடுகளில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் அவர்கள் நம் நாட்டுப் பல்கலையில் படித்துச் சென்றவர்கள். கால்நடைகளும், மரங்களும், விலங்குகளும் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும், அப்போது தான் மண் வளமுறும். இது நம் முன்னோர்கள் அறிந்த ஒன்றாகும். விவசாயிகளுக்கான 'ஆப்' (APP) ஒன்றைத் துவங்க உள்ளோம். அது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...