ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டம் : சுயிட்ஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம்

கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


கோவை : கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் தொழில்மையங்களைக் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். இங்கு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் என்பது மிகக் கடினமாக ஒன்றாக உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் கோவை மாநகராட்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுடைய இந்தத் திட்டத்திற்கு சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 24*7 என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், 1,200 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 1,50,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தைப் பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்ட நிலையில், சுயிட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் மாவட்டத்திற்கு முதல்முறையாக குடிநீர் விநியோகத் திட்டத்தை சுயிட்ஸ் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து,  மெட்ரோநகரங்களான பெங்களூரூ, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தங்களது பணியை மேற்கொண்டுள்ளது. 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...