உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.  பேருந்து நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சிக்னலை கடந்து சென்று கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பாலக்காடு சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்றது. அப்போது, சுங்கம் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முன்புற சக்கரம் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்தை நகர்த்தி வைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர். இதில், சதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிபிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணம் அரசுப் பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவு தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...