அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் -அமைச்சர் தங்கமணி

அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கோவை: அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பாக 42 வது தேசிய மின்வாரியங்களுக்கு இடையேயான 

கூடைப்பந்தாட்ட போட்டி கோவை பீளமேட்டு பகுதியில் உள்ள தனியார் உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் கேரளா மின்வாரிய அணி முதலிடமும், தமிழ்நாடு மின்வாரிய அணி இரண்டாமிடமும், பஞ்சாப் அணி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மின்வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிசுகளை வழங்கினர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

மின்வாரிய பணியாளர்களின் சம்பள பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம்தான் இருக்கும். மேலும் சி.ஐ.டி.யூ மற்றும் பி.எம்.எஸ் போன்ற தொழிலாளர் அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லியும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். பேச்சு வார்த்தை முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. 

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தற்போதுள்ள வழித்தடம் மூலம் 150 மெகா வாட் வழங்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு 500 மெகா வாட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், உதய் மின் திட்டத்தில் இணைந்த பிறகு 13 ஆயிரம் கோடி இருந்த கடன் தற்போது 4000 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் கடன் தொகை மேலும் குறைக்கப்படும். நிலக்கரி இறக்குமதிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவையானவற்றை மத்திய அரசே கொடுத்துள்ளது. தற்போது நிலக்கரி உற்பத்தி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...