காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு முழு முயற்சி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.



கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஆஞ்சியோ கிராம், அழகியல் துறை, செவிவழி பேச்சு பயிற்சி, கூடுதல் டயாலிசஸ் பிரிவு ஆகியவற்றிற்கு புதிய துறைகள் மற்றும் புதிய கருவிகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

ஆஞ்சியோ கிராம் துறையின் மூலம் இரத்தகுழாயின் அடைப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதேபோல, புதிதாக அழகியல் துறையும் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களை குணப்படுத்தலாம். டயாலிசஸ் துறைக்கு 9 இயந்திரங்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 5 இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:- கோவை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இருதயவியல் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டு ரூ. 5 கோடி மதிப்பில் புதிய இயந்திரங்கள் அந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய குழாயில் ஸ்டண்டு வைப்பது போன்ற சிகிச்சைகள் இனி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் சேவைக்காக செயல்படும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 5 இயந்திரங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு இயந்திரத்தை வைத்து நாளொன்றுக்கு மூன்று அறுவை சிகிச்சை வீதம், மொத்தம் 45 அறுவை சிகிச்சை செய்யலாம். மேட்டுப்பாளையம் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் மிஷின் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை சுகாதாரத் துறை அமைச்சர் பரிசீலித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.



காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முதலமைச்சர் தலைமையில் முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்கப்படும். மேலாண்மை வாரியத்தைக் கட்டாயம் அமைக்காமல் விடமாட்டோம். இதற்காக, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகிறோம். 17 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தான் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. என்றார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "கோவை அரசு மருத்துவமனையில் இனி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அமைச்சர் வேலுமணி விடுத்த சி.டி. ஸ்கேன் கோரிக்கை, இந்த நிதியாண்டில் அறிவித்து உடனடியாக வழங்கப்படும். மேலும், ரூ. 8 கோடி மதிப்பில் அதிநவீன கேத் லேப் மற்றும் ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்யும் அதிநவின எம்.ஆர்.ஐ. மிஷின் போன்றவை கோவைக்கு வழங்கப்படும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 186 கேது கேளாதோருக்கான அறுவை சிகிச்சை கோவையில் நடந்துள்ளது," எனக் கூறினார். 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...