கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கடை பணிகள் மற்றும் மியாவாக்கி அடர்வனம் திட்ட இடத்தை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டலம் பகுதியில் செயல்படும் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேற்கு மண்டலம் வார்டு எண். 72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையலகத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார். சமையல் செய்து எடுத்து செல்லும் ஹாட்பாக்ஸ், உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இருப்பு அறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.37க்குட்பட்ட வடவள்ளி பிரதான சாலையில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வடவள்ளி வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டார். பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் மியாவாக்கி அடர்வனம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வுகளின் போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் நர்மதா. மகேஷ்கனகராஜ் (வருவாய்), மாநகர கல்வி குணசேகரன்(பொ), செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் அலுவலர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...