விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் : வாழ்வாதாரத்திற்கான மாற்று வழி என்ன?

திருப்பூர்: தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வேளாண் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.


திருப்பூர்: தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வேளாண் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மின் வழித்தடங்கள் அமைக்கப்படுவது அவசியம் என்ற போதிலும், அதற்காக முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும்.

கரூர் மாவட்டம் புகழூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை என பல்வேறு உயரழுத்த மின் பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 



இந்த மின் பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை.

வேளாண்மை 

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை விவசாயம் செய்யவோ, கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்காகவோ, ஆழ்துளைக் கிணறுகள் அல்லது கிணறுகள் அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால், வேளாண் விளைநிலங்களின் மதிப்பு குறைவதுடன், பாகப் பிரிவினையில் சிக்கல்கள் ஏற்பட்டு உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வேளாண் விளைநிலங்கள்தான் விவசாயிகளின் ஒற்றை சொத்தாகவும், வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. 

வளர்ச்சி என்ற பெயரில் அவற்றையும் சிதைத்து விவசாயிகளின் சொத்து மதிப்பையும், வாழ்வாதாரத்தையும் குறைப்பது மிகப்பெரிய அநீதியும், மனித உரிமை மீறலும் ஆகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்பது தான் கொடுமையிலும் கொடுமை.

மின் கோபுரங்கள் 

இண்டூரை மையமாகக் கொண்டு ஏரியூர், பெரும்பாளை, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் தங்களின் விளை நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். மின்பாதை அமைக்கப்படும் நிலங்களுக்கு முழுமையான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இழப்பீடு வழங்குவதில் முழுமையான வெளிப்படைத்தன்மையும் கடைபிடிக்கப்படுவதில்லை. 

வலிமையுள்ளவர்கள் அதிக இழப்பீடு பெற்றுக் கொள்ளும் நிலையில் நலிவடைந்த விவசாயிகளுக்கு சொற்பத்தொகையே இழப்பீடாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு சிலருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. தருமபுரி உட்பட தமிழகம் முழுவதும் இத்திட்டப்படி வழங்கப்பட்ட இழப்பீடு பற்றி தணிக்கை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது. 

கேரளம் 

இத்தகைய மின் கோபுரத் திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. உதாரணமாக புகலூர் - திருச்சூர் மின்பாதைத் திட்டத்தில் 40 கி.மீ நீளத்திற்கான பாதை சாலையோரம் பூமிக்கு அடியில் தான் செல்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின் பாதைகளையும் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்தலாம். இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதை விட, பூமிக்கு அடியில் கேபிள்களை புதைப்பதற்கு கூடுதலாக செலவாகும், பராமரிப்பு செலவுகளும் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதை மாற்று வழிகளில் சமாளிக்க முடியும். கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால் குறைந்தபட்சம் 12% இழப்பு ஏற்படும். ஆனால், பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டு செல்வதால் மின் இழப்பு ஏற்படாது. பூமிக்கடியில் கேபிள் புதைப்பதால் ஆகும் கூடுதல் செலவை, 12% மின் இழப்பு கட்டுப்படுத்தப்படுவதால் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு முழுமையாக ஈடு செய்து விட முடியும் .

மின் பாதைகள் மட்டுமின்றி, கேரளத்திலிருந்து கர்நாடகத்திற்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்ப் பாதையும் வேளாண் விளைநிலங்கள் வழியாகத் தான் அமைக்கப்படுகின்றன. இதனால் சேலம், கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாட்டுக்கு வளர்ச்சியும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக விவசாயத்தை பலி கொடுக்கக்கூடாது. ஏனெனில், வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது என்றால் விவசாயம் புனிதமானது ஆகும். வளர்ச்சி பற்றி பேசுவோர் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

"தமிழகத்தில் உயர் அழுத்த மின் பாதைகளை வேளாண் விளைநிலங்களில் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, சாலையோரங்களில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து மின்பாதைகளை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...