கோவையில் எலி பொம்மை கடித்து போராட்டம் நடத்திய தி.மு.க-வினர்

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க-வினர் 4 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், செல்வபுரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக, காளை மாடுகளை மாட்டு வண்டியில் பூட்டி, எர் கலப்பையுடன் வந்த கட்சியினர், விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டதை வெளிப்படுத்தும் விதமாக, மறியலில் ஈடுபட்டனர். 

கருப்பு சட்டை அணிந்த தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து, வாயில் எலி பொம்மைகளை கவ்விய படி, சங்கு ஊதியும், மணி அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...