ஐ.பி.எல்., போட்டிகளுக்கு தடை கோரி வழக்கு : வரும் 13-ம் தேதி விசாரணை

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அவர் தாக்கல் செய்த மனுவில், சூதாட்டத்தைத்தடை செய்யாமல் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது. சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்க பி.சி.சி.ஐ., மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...