யு.ஜி.சி.யின் டாப் 100 சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகளுக்கு இடம்

யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. 

தேசிய அளவிலான சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலை யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 38 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கோவையில் ஒன்பது கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவை கல்லூரிகளின் விவரம் :

1) பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

2) பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி

3) கோவை அரசு கலை கல்லூரி

4) ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்

5) ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

6) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி

7) சி.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரி

8) டாக்டர். என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

9) ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி

இதில், கோவை அரசு கலை கல்லூரியானது இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழகத்தில் 7-வது இடத்தையும், கோவையில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இது குறித்து கோவை அரசு கலை கல்லூரியின் முதல்வர் நளினி கூறும்போது, "சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் அரசு கல்லூரி இடம்பிடித்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. வேலை வாய்ப்பு, தேர்ச்சி விகிதம், பாடத்திட்டம் உள்ளிட்ட அடிப்படையில் இந்த ரேங்கிங் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 5,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நவீன  தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்கள் நடத்தப்படுகின்றன. அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களே பயின்று வருகின்றனர். தனியார் கல்லூரிகளை விட சிறப்பான முறையில் கோவை அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது," இவ்வாறு கூறினார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...