சுற்றுலாப் பயணிகளை கவர புதுப்பொலிவு பெறும் உதகை அரசு தாவரவியல் பூங்கா

உதகை : உதகையில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 122-வது மலர் கண்காட்சியையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவைப் புதுப் பொலிவூட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உதகை : உதகையில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 122-வது மலர் கண்காட்சியையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவைப் புதுப் பொலிவூட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 



இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது  150 ஆண்டுகளுக்கு முன்பு உதகையில் அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் நியூசிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பூங்காவில் 100 ஆண்டுகளைக் கடந்த பழமையான மரங்கள் உள்ளன. இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசன் சமயங்களில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.  



இந்தப் பூங்காவில் 4 கண்ணாடி மாளிகைகள் உள்ளன. இந்தக் கண்ணாடி மாளிகைகளில் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வளரக் கூடிய மலர் செடிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 3 கண்ணாடி மாளிகைகளைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில், ஒரு கண்ணாடி மாளிகையில் பெரணி வகை செடிகளும், 2-வது கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான கள்ளி செடிகள் மற்றும் மலர்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன.



இது குறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குநரிடம் சிவசுப்ரமணியத்திடம் கேட்டபோது, "பிரதான கண்ணாடி மாளிகையில் இருந்த கண்ணாடிகள் பழுதடைந்துள்ளதால், தற்போது கண்ணாடி மாளிகை முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மலர் கண்காட்சிக்காக பூங்காவில் மலர் நாற்றுகள் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் பூங்காவைப் பொலிவுப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள வேலிகளுக்கு வர்ணம் பூசும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் பிற பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 

தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் நோக்கில் தோட்டக்கலைத்துறை ரூ. 5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பூங்காவில் உள்ள 10 கண்ணாடி மாளிகைகள் மற்றும் பூங்காவில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் நவீன மயமாக்கப்படவுள்ளன. கண்ணாடி மாளிகைகள் ரூ. 2.63 கோடியில் கட்டப்படுகின்றன. நுழைவு வாயிலில் தற்போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுக்களை வாங்க சாலைகளில் காத்து நிற்க வேண்டியுள்ளது. நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் வந்து, நுழைவு சீட்டுக்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் கணினி மயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கு முன்னர் பூங்கா புதுப்பொலிவு பெறும்," என்றார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...