காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி டவர் மீது ஏறிப் போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினுள் உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். பின்னர், அங்கே நின்று கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் எனக் கோரி கோஷம் எழுப்பினார். இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வந்து வாக்குறுதி அளித்தால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவேன் என அவர் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, 2 மணி நேரமாகப் போராட்டத்திற்கு பின்னர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், கார்மேகத்தை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...