குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

தேனி : தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேனி : தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர். 

மறுநாளில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி மறுநாளில் உயிரிழந்தார். 

அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் பலியாக பலி எண்ணிக்கை 22 ஆனது. இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...