தானிய மாவுகள், நறுமணபயிர் பொடிகளில் ஏற்படும் பூச்சிகளை ஒழிக்கும் புதிய பொறி கண்டுபிடிப்பு

கோவை: தானிய மாவுகள் மற்றும் நறுமணப் பயிர் பொடிகளில் தங்கும் பூச்சிகளை ஒழிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஒரு புதிய பொறியைக் கண்டுபிடித்துள்ளது.

கோவை: தானிய மாவுகள் மற்றும் நறுமணப் பயிர் பொடிகளில் தங்கும் பூச்சிகளை ஒழிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஒரு புதிய பொறியைக் கண்டுபிடித்துள்ளது. 

தானியமாவுகள் மற்றும் நறுமணபயிர் பொடிகளை நாம் வீடுகளிலும், பண்ணைகளிலும் மற்றும் பதன் செய்யும் மையங்களிலும் கலன்களில் சேமிக்கும் போது மிகவேகமாகப் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவதை காணமுடியும். தானியங்களைக் காட்டிலும் மாவு மற்றும் நறுமண பொடிகளை சேமிக்கும் பொழுது குறுகிய காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் வெகுவிரைவாக ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாவு மற்றும் நறுமணபயிர் பொடிகளில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிந்து மற்றும் அவைகளை அப்புறப்படுத்த ஒரு எளியப் பொறியை வடிவமைத்துள்ளது.

இப்பொறி ஒரு டம்ளர் போன்ற வடிவமைப்பைக் கொண்டது. எங்கும் எளிதாக மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் எவர் சில்வர் டம்ளர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டம்ளரின் மேல் பாகத்தில் 2 மி.மீ துவாரங்களை கொண்ட தகடு பொருத்தப்பட்டுள்ளது.  இந்த துவாரம் வழியாக பூச்சிகள் மற்றும் புழுக்கள் பொறியில் நுழைந்து பொறியின் அடிப்பாகத்தில் உள்ள 0.8 - 0.9 மி.மீ சல்லடை மேல் மாட்டிக் கொள்ளும்.  மிக மிகக் குறைந்த அளவே, மாவு மற்றும் பொடிகள், பூச்சிகள் டம்ளரின் மேல் பகுதியில் உள்ள 2 மி.மீ துவாரத்தில் பூச்சிகள் நுழையும் போது சிதறி சல்லடை மேல் விழும். அதனால் பொறியில் எந்த அடைப்பும் ஏற்படவாய்ப்பில்லை. மேலும் பொறியை எளிதாக மாவு, பொடிகள் உள்ள கலங்களில் வைக்க கம்பிபோன்ற அமைப்பு மேல் தகட்டில் பொருத்தப்பட்டுள்ளது.



வாரம் ஒரு முறை பொறியை வெளியில் எடுத்து, எளிதாக திறக்கும்படி அமைக்கப்பட்டுள்ள மேல் மூடியை கழற்றி பூச்சி மற்றும் புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் பொறியை சுத்தம் செய்து மீண்டும் வைத்து பயன் பெறலாம். இந்நாள் வரை மாவு மற்றும் நறுமண பயிர்பொடிகளின் சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிய ஒரு எளிய சாதனம் கண்டறியப்படவில்லை. எனவே, இக்கண்டுபிடிப்பு மாவு மற்றும் நறுமண பயிர்பொடிகளின் சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை உடனுக்குடன் அறிந்து அவற்றை அகற்ற ஒரு சிறந்த, அனைவரின் பயன்பாட்டிற்கு உகந்த கண்டு பிடிப்பாகும்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...